in

திமுக எம்பி திருச்சி சிவாவை கண்டித்து தேனியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக எம்பி திருச்சி சிவாவை கண்டித்து தேனியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

 

மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும், முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான காமராஜர் குறித்து கடந்த சில தினங்களுக்கு முன் திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா எம்பி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி சிவா எம்பியின் இந்த சர்ச்சை பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காமராஜர் குறித்து திருச்சி சிவா எம்பியின் சர்ச்சை பேச்சை கண்டித்து இன்று தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சுமார் 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர். அப்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திருச்சி சிவாவை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

மேலும் திருச்சி சிவா எம்பி மண்ணிப்பு கேட்க வேண்டும், அவர் மீது திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி கோசங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

What do you think?

மயிலாடுதுறையில் மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் பரபரப்பு குற்றச்சாட்டு

கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம்