நடிகர் நாகார்ஜுனா ஓகே சொல்ல ஐந்து மாதங்கள் ஆனது
கூலி ரிலீஸ்..இக்கு தயாராகும் நிலையில் நாகர்ஜுனா... வை இப்படத்தில் நடிக்க எப்படி சம்மதிக்க வைத்தார் என்பதை லோகேஷ் கனகராஜ் தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியா….வுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
நாகார்ஜுனாவை ஒரு வில்லனாக நடிக்க சம்மதிக்க வைக்க கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் ஆனது, “அவர் கதையை ஏழு அல்லது எட்டு முறை சொல்லச் சொன்னார்.
அவருக்குப் பிடிக்காததால் அல்ல, ஆனால் வில்லனாக நடிக்க அவர் எளிதில் சம்மதிக்காததால். ஆனால் நான் இறுதியாக அவருக்கு முழு ஸ்கிரிப்டைக் கொடுத்தபோது, அவர், ‘சரி, லோகேஷ். நான் இப்போது இதைச் செய்யவில்லை என்றால், எப்போது செய்வேன்?’ என்றார்” வில்லனாகப் புதிய களம் காணும் நாகார்ஜுனா, அந்தக் கதாபாத்திரத்தில் முழு ஈடுப்பட்டுடன் நடித்ததாக கூறினார்.
“ஒரு ஹீரோவைப் பொறுத்தவரை, சில வரம்புகளுக்குக் கட்டுப்பட்டவர். ஒரு கெட்டவனாக நடிக்க, எல்லா விதிகளையும் மீறலாம். ஒவ்வொரு முறையும் அவர் ஒரு கெட்ட வார்த்தையைப் கூறும் போது, என்னைப் பார்த்து, ‘லோகேஷ், நான் 40 வருடங்களாக இதை செய்ததில்லை!’ என்று கூறுவார்.
அவருடைய குடும்பத்தினர் எப்படி இதை எடுத்துகொள்வார்கள் என்று நான் அவரிடம் கேட்டேன், படம் ‘வெளியான பிறகுதான் எனக்குத் தெரியும்’ என்றார்.


