in

திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆனி மாத பவுர்ணமி தங்க கருட வாகனம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆனி மாத பவுர்ணமி தங்க கருட வாகனம்

 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனி மாத பவுர்ணமியையொட்டி இன்று தங்க கருட வாகனத்தில் மலையப்ப சாமி கோயிலில் உள்ள வாகன மண்டபத்தில்   எழுந்தருளினார்.

பின்னர் சிறப்பு பூஜைகள்  செய்யப்பட்டு பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துக்கு மத்தியில் நான்கு மாடவீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தார்.  108 வைணவ ஸ்தலங்களில் கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருள்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

அவ்வாறு ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம்.

அவ்வாறு ஆனி மாத பவுளர்ணமியையொட்டி வீதி உலாவின் போது பக்தர்கள் நான்கு மாட வீதியில் காத்திருந்து கற்பூர ஆரத்தி எடுத்து சாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர்.

இதில் துணை செயல் அதிகாரி லோகநாதம் மற்றும் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

ஜூலை 29ஆம் தேதி கருடபஞ்சமியையொட்டி மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் நான்கு மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார் .

What do you think?

ஆனி மாத பௌர்ணமி திருநாளை முன்னிட்டு வெள்ளி ரதம் பவனி

இரட்டணை ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழா