பந்தய செயலிகளை விளம்பரப்படுத்தியதற்காக 29 நடிகர்களுக்கு சும்மன்
சட்டவிரோத ஆன்லைன் பந்தய தளங்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகக், நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட பிரபலங்கள் மீது அமலாக்க இயக்குநரகம் (ED) பணமோசடி விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த வழக்கில் தெலுங்கானாவைச் சேர்ந்த பல சமூக ஊடகங்கள் மற்றும் யூடியூபர்கள் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
மாநில காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட FIRகள் மேலும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் வழக்குப் பதிவு செய்யபட்டுள்ளது.
இந்த பிரபலங்கள் ஜங்லீ ரம்மி, ஜீட்வின் மற்றும் லோட்டஸ்365 போன்ற ஆன்லைன் பந்தய செயலிகளை விளம்பரப்படுத்தி, அதற்கு ஈடாக கணிசமான பணம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்த தளங்கள் சூதாட்டம் மற்றும் சட்டவிரோத பந்தய நடவடிக்கைகள் மூலம் மில்லியன் கணக்கில் பணம் சம்பாதித்துள்ளனர்.
ED (Enforcement Directorate) ஆல் குற்றம்சாற்றியுள்ள 29 நபர்களில் நடிகைகள் மஞ்சு லட்சுமி, நிதி அகர்வால், பிரணிதா சுபாஷ் மற்றும் அனன்யா நாகல்லா, தொலைக்காட்சி நடிகை ஸ்ரீமுகி ஆகியோர் அடங்குவர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் இந்த தளங்கள் வழங்கும் சேவைகளின் சரியான தன்மை குறித்து தங்களுக்குத் தெரியாது என்று தெளிவுபடுத்தியுள்ள நிலையில், வரும் நாட்களில் அவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்ய ED திட்டமிட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், சட்டவிரோத ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பணமோசடி செய்ததாக கூறப்படும் மகாதேவ் பந்தய செயலி வழக்கை அமலாக்கத் துறை முறியடித்ததன் மூலம், அதன் வருமானத்தைக் கண்காணிப்பதில் விசாரணை தற்போது கவனம் செலுத்துகிறது.
பிப்ரவரி 2023 இல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த மகாதேவ் பந்தய செயலி விளம்பரதாரர் சவுரப் சந்திரகரின் ₹200 கோடி மதிப்புள்ள ஆடம்பரமான திருமணம், சந்தேகத்தை ஏற்படுத்தியது.
பல பாலிவுட் பிரபலங்களுடன் சேர்ந்து, செயலியையும் ஆய்வுக்கு உட்படுத்தியதில். ரன்பீர் கபூர், ஷ்ரத்தா கபூர், கபில் சர்மா, ஹுமா குரேஷி மற்றும் ஹினா கான் உள்ளிட்ட பிரபலங்கள், திருமணத்தின் விளம்பர நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றதால் விசாரணை நடத்த அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.


