in

பாண்டுரங்க விட்டலேஸ்வரரா் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

பாண்டுரங்க விட்டலேஸ்வரரா் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

 

விட்டிலாபுரம் அருள்மிகு பாண்டுரங்க விட்டலேஸ்வரரா் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் 15 வருடம் கழித்து வெகு விமா்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் தாிசனம்.

தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள ஊா் விட்டிலாபுரம். இங்குஅருள்மிகு பாண்டுரங்க விட்டலேஸ்வரரா் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தியாவில் பாண்டுரங்கருக்கு இரண்டு இடத்தில் மட்டுமே கோயில் அமைந்துள்ளது. ஒன்று வடக்கே பண்டாிபுரம், மற்றொன்று தெற்கே விட்டிலாபுரத்தில் அமைந்துள்ள இத்திருக்கோயிலாகும்.

கி.பி் 1547ல் விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்ட பழமைவாய்ந்த இத்திருக்கோவிலில் மூலவா் ருக்மணி சத்யபாமா சமேத விட்டலேஸ்வரரா் நின்ற நிலையில் அருள்பாலிக்கின்றாா். இத்திருக்கோயிலில் உற்சவா் பாண்டுரங்கன் தாமிரபரணி ஆற்றில் விட்டலமன்னனால் கண்டெடுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

தஷிண பண்டாிபுரம் என்றழைக்கப்படும் இத்திருக்கோயிலில் கடந்த வருடம் கும்பாபிஷேக திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நிறைவடைந்த நிலையில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக கடந்த 4ம்தேதி தாமிரபரணி நதியில் இருந்து தீா்த்தம் கொண்டு வரப்பட்டு பகவத் பிராா்த்தனை எஜமான வா்ணம் மகா ஸங்கல்பம் அனுக்கை விஷ்வக்சேன ஆராதனம் என ஆரம்பிக்கப்ட்டது.

தொடா்ந்து நான்கு கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷே தினமான இன்று அதிகாலை ஐந்தாம் கால யாகசாலை பூஜைகள் ஆரம்பமாயிற்று. அதிகாலை நித்ய ஆராதனம் நடைபெற்று கும்ப பிம்ப மண்டலாக்னி ஆராதனம் மூா்த்தி ஹோமம் பிரதான ஹோமங்கள் நடைபெற்று மகா பூா்ணாகுதியானது நிறைவேறிற்று.

தொடா்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று அருள்மிகு ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ பாண்டுரங்க விட்டலேஸ்வரா் விமானம், மூா்த்திகள் மற்றும் பாிவார மூா்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகமானது நடைபெற்றது. கும்பத்திற்கு அலங்காரம் வஸ்திரம் சாற்றி கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

வந்திருந்த பக்தா்கள் மேல் கும்ப தீா்த்தமானது தெளிக்கப்பட்டது. அதனை தொடா்ந்து மூலஸ்தா மூா்த்திகளுக்கு மஹா ஸம்ரோஷணம் திருவாராதனம் சாற்றுமறை கோஷ்டி ஆச்சாா்ய பகுமானம் நடைபெற்றது. பக்தா்களுக்க்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் கருடசேவை புறப்பாடு நடைபெறுகின்றது.

What do you think?

Box Office Record …டை முறியடித்த ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த்

கூலி படம் IMAX..வெளியாவதில் சிக்கல்