in

நிலத்தடி நீர் வரிவிதிப்பு பிரச்சனைக்கு முதலமைச்சர் நீதிமன்றத்தை நாடுவார் அமைச்சர் நேரு பேட்டி

நிலத்தடி நீர் வரிவிதிப்பு பிரச்சனைக்கு முதலமைச்சர் நீதிமன்றத்தை நாடுவார் அமைச்சர் நேரு பேட்டி

 

விவசாயத்திற்கு பயன்படுத்தும் நிலத்தடி நீர் வரிவிதிப்பு பிரச்சனைக்கு மத்திய அரசு செவி சாய்க்காவிட்டால் முதலமைச்சர் நீதிமன்றத்தை நாடுவார்
தஞ்சையில் அமைச்சர் நேரு பேட்டி.

தஞ்சை மத்திய மாவட்ட திமுக பாக நிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் தஞ்சையில் நகர்புற நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு தலைமையில் நடைபெற்றது.

இதில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டனர். கூட்டத்திற்கு பின் பேட்டியளித்த அமைச்சர் நேரு விவசாயத்திற்கு பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரிவிதிப்பு என்கிற ஒவ்வாத சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இது தொடர்பாக திமுக தலைவர் மத்திய அரசிடம் முறையிடுவார்.

அதற்கு மத்திய அரசு செவி சாய்க்காவிட்டால், நீதிமன்றத்தை அணுகுவார். திமுக உறுப்பினர் சேர்க்கையை முதல்வர் ஸ்டாலின் ஜூலை 3 ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார்.

மேலும் பொறுப்பாளர்களை அழைத்து எத்தனை உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என அறிவுறுத்துவார்.

இதை ஏற்று பொறுப்பாளர்கள் உறுப்பினர்களை சேர்த்துக் கொடுப்பார்கள். வருகிற தேர்தலில் திமுக கூட்டணிதான் மீண்டும் வெற்றி பெறும் என தெரிவித்தார்.

What do you think?

ஆஷாட நவராத்திரி விழா 4 ஆம் நாள் சந்தனம் அலங்காரம்

தேவராயன்பேட்டை ஸ்ரீ தில்லையம்மன் ஆலய பால்குட திருவிழா