in

விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மயங்கி விழுந்த விவசாயி

விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மயங்கி விழுந்த விவசாயி.

 

சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மயங்கி விழுந்த விவசாயி. அரசு வாகனத்தில் மருத்துவமணையில் அனுமதித்த வட்டாட்சியர். நன்றி தெரிவித்த விவசாயிகள்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் சுரேஷ் தலைமையில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சீர்காழி வட்டாட்சியர் அருள்ஜோதி நீர்வளத்துறை, வேளாண் துறை, மின்வாரியத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்த போது சீர்காழி தென்பாதி பகுதியை சேர்ந்த விவசாயி உத்திராபதி தான் அமர்ந்த இருக்கையிலேயே மயங்கினார். அதை பார்த்த சக விவசாயிகள், கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அவரை மீட்டு தண்ணீர் கொடுத்து காற்றோட்ட பகுதியில் அமர வைத்தனர்.

அதனை தொடர்ந்து வட்டாட்சியர் அருள்ஜோதி 108 அவசர வாகனத்திற்கு தனது செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். 108 வாகனம் வர தாமதமானதால் வட்டாட்சியர் தனது அரசு வாகனத்தில் விவசாயிகள் உதவியுடன் உத்திராபதியை சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

இதனால் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மயங்கி விழுந்த விவசாயியை மீட்டு துரிதமாக தனது வாகனத்தில் மருத்துவமனையில் அனுமதித்த கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியருக்கு சக விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

What do you think?

தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறிய ஐடி ஊழியர்

போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய் துறையினரால் பொதுமக்கள் அவதி