சுதந்திர போராட்ட தியாகி விஸ்வநாத தாஸ் 139 பிறந்த நாள் விழா
சுதந்திர போராட்ட தியாகி விஸ்வநாத தாஸ் 139 பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மருத்துவ சமுதாய மக்கள் சார்பில் இராமேஸ்வரம் கொண்டேஸ்வர் மடத்தில் நடைபெற்ற விழாவில் நகர் மன்ற தலைவர் நாசர் கான் கலந்து கொண்டு விஸ்வநாததாஸ் திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கொண்டேஸ்வர் மடத்தில் இந்திய சுதந்திரத்திற்காக தனது பாடல்கள் மூலம் சுதந்திர போராட்டத்தின் போது பலமுறை சிறை சென்று மேடை நாடகத்திலேயே உயிர் திறந்த தியாகி விஸ்வநாததாஸ் அவர்களின் 139 பிறந்தநாளை முன்னிட்டு ராமேஸ்வரம் கொண்டேஸ்வர் மடத்தில் மருத்துவ சமுதாய சங்கத்தினர் சார்பில் தியாகி விஸ்வநாத தாஸுக்கு பிறந்தநாள் விழா நடைபெற்றது
இந்த விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் சிறப்பு அழைப்பாளராக ராமேஸ்வரம் நகர் மன்ற தலைவர் நாசர் கான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சி ஆர் செந்தில்வேல் தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த ஜெரேம் குமார் மற்றும் மருத்துவ சமுதாய முக்கிய பிரமுகர்கள் மற்றும் உறுப்பினர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அதன் பின் விஸ்வநாததாஸ் திருவுருவப்படத்திற்கு அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகளுக்கு பேனா நோட்டு புத்தகங்கள் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராமேஸ்வரம் மருத்துவ சமுதாய சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர் அதன் பின் அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.


