in

ஆளில்லாமல் கரை ஒதுங்கிய பைபர் படகு போலீசார் விசாரணை

ஆளில்லாமல் கரை ஒதுங்கிய பைபர் படகு போலீசார் விசாரணை

 

கோடியக்கரை பழைய கலங்கரை விளக்கம் அருகே இலங்கை நாட்டைச் சேர்ந்த பைபர் படகு ஒன்று ஆளில்லாமல் கரை ஒதுங்கி உள்ளது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகை மாவட்டம் வேதாரணியம் அடுத்த கோடியக்கரை பழைய கலங்கரை விளக்கம் அருகே கடற்கரையில் ஒரு பைபர் படகு ஒதுங்கி இருக்கிறது. இன்று காலை அப்பகுதி வழியே கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் படகைப் பார்த்து போலீசாருக்கு தகவல் தந்துள்ளனர்.

அந்தப் படகு இலங்கை நாட்டைச் சேர்ந்த பைபர் படகு என்பதும் அந்தப் படகில் 25 குதிரை திறன் கொண்ட சுசுகி என்ஜினும், நங்கூரமும் இருக்கிறது.

இந்த படகின் மூலம் கடத்தல் காரர்கள் வந்தார்களா..? அல்லது மர்ம நபர்கள் யாராவது தமிழகத்திற்குள் ஊடுருவி உள்ளார்களா…? அல்லது இலங்கை கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு காற்றின் வேகத்தால் அடித்து வரப்பட்டதா…? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What do you think?

ஓஎன்ஜிசி நிறுவனம் மீது குற்றம் சாட்டி, மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை

ஸ்ரீ திரௌபதி அம்மன் ஸ்ரீ தர்மராஜா ஆலய அக்னி வசந்த மகோற்சவ விழா