in

மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் கோபமடைந்த அமைச்சர் சி.வே. கணேசன்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் கோபமடைந்த அமைச்சர் சி.வே. கணேசன்

 

மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் கோபமடைந்த அமைச்சர் சி.வே. கணேசன் – ஒரு தொகுதியில் 40 நபர்களுக்கு மட்டும் நலத்திட்ட உதவிகள் வழங்கினால் எப்படி..? பிச்சை போடுகிறீர்களா என சரமாரியாக கேள்வி..

நான் என்ன என் வீட்டிற்கா கேட்கிறேன்? மக்களுக்கு தானே கொடுக்க கூறுகிறேன் என சரமாரியாக கேள்வி. துறை துறையாக கேள்வி மேல் கேள்வி எழுப்பி கோபமடைந்த அமைச்சர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவாமூர் கிராமத்தில் மக்களிடம் முதல்வர் திட்டம் நடைபெற்றது. இந்த மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமில் அனைத்து துறை சார்ந்த மனுகளும் பெறப்பட்டன. இந்த முகாமினை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி வே கணேசன் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் ஆகியோர் பார்வையிட்டு எவ்வளவு மனுக்கள் பெறப்பட்டன என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

ஆய்வின் பொது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் இன்று எவ்வளவு பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார். அதிகாரிகள் 40 நபர்களுக்கு என கூறியவுடன் ஏன் 100 பேருக்கு தர வேண்டியதுதானே 40 பேருக்கு மட்டும் ஏன் பிச்சை போடுறீங்களா? என்றும் நாளைக்கு சேர்த்து 500 நபர்களுக்கு நெய்வேலி தொகுதியில் கொடுக்க வேண்டும்.

நான் அன்பா இருப்பேனே தவிர வேலையில் சரியாக இருக்க வேண்டும்.
என் வீட்டுக்கா கேட்கிறேன் பொதுமக்களுக்கு தானே கேட்கிறேன், நாளை 500 நபர்களுக்கு தொகுதியில் கொடுத்திருக்க வேண்டும் என கடுமையாக எச்சரித்தார்.

அருகாமையில் இருந்த கால்நடைத்துறை மருத்துவரிடம் கால்நடைகளுக்கு எந்த மாதிரி நோய்கள் வரும் என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார்? கால்நடை மருத்துவர் எல்லா நோய்களும் வரும் என்று பதில் தெரிவித்தார். கோபமடைந்த அமைச்சர் நான் கேட்ட கேள்விக்கு தான் பதில் கூற வேண்டும் ஏதோஒரு பதில் கூறக்கூடாது, கால்நடைத்துறை மருத்துவரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு ஆய்வு நடத்தினார்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் எவ்வளவு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அதிகாரியிடம் அமைச்சர் கேள்வி எழுப்பினார். துறை சார்ந்த ஊழியர்களுக்கு எந்தவித தகவலும் தெரியவில்லை. உடனே அருகில் இருந்த மாவட்ட ஆட்சியர் எவ்வளவு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து விளக்கினார்.

வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் எவ்வளவு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து வருவாய்த்துறை அதிகாரியிடம் அமைச்சர் கேள்வி எழுப்பினார். ஆனால் வட்டாட்சியருக்கு எந்தவித தகவலும் தெரியவில்லை என்பதால் கோபம் அடைந்த அமைச்சர், முகாமிற்கு மாவட்ட ஆட்சியர், அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர்கள் டிஆர்ஓ என அனைவரும் வருகிறார்கள். எவ்வளவு மனுக்கள் பெறப்பட்டுள்ளது, எவ்வளவு பட்டாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது, எவ்வளவு காத்திருப்பு பட்டியலில் உள்ளது என்பது குறித்து தகவல் இல்லாமல் ஏன் முகாமிற்கு வந்தீர்கள், என கேள்வி மேல் கேள்வி எழுப்பினார்.

அடுத்ததாக மின்சார துறைக்கு சென்றார். மின்சாரத் துறை அதிகாரிகளிடம் எவ்வளவு மனுக்கள் வரப்பட்டுள்ளது என்பது குறித்து கேள்வி எழுப்பினார் ஒன்றுமே இல்லை என பதில் வர இது நல்ல துறை சார்ந்த இடம் இங்கு எந்த குறையும் இல்லை போல என்று கூறிவிட்டு சென்றார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அமைச்சர் சி.வே.கணேசன் 2000 நபர்களுக்கு பல்வேறு துறை சார்ந்த நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

What do you think?

பூங்காவை பராமரிக்க வலியுறுத்தி பொதுமக்கள் மனு..

ஹோலி கிராஸ் பள்ளியில் மாணவர்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி