நம்பிக்கையாகவே நின்று வழி காட்டும் Siva தம்பிக்கு நன்றி
நடிகர் சிவகார்த்திகேயன் மறைந்த விவசாயி நெல் ஜெயராமன் மகனின் படிப்புக்கு உதவி செய்து வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து இயக்குனர் ரா. சரவணன் தனது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார்.
சீனிவாசன் என்ன படிக்கிறார், எந்த கல்லூரியில் படிக்கிறார் என்ற விவரங்களை சேகரித்து கோவை கற்பகம் கல்லூரியில் பேசி அவரை சேர்த்திருக்கிறார்.
நெல் ஜெயராமன் உயிரோடு இருந்தால் மகனுக்கு என்னவெல்லாம் செய்திருப்பாரோ அதை விட பன்மடங்கு சிவகார்த்திகேயன் செய்து இருக்கிறார்.
நெல் ஜெயராமன் அப்போலோ..வில் இருந்தபோது பாண்டிச்சேரியில் சூட்டில் இருந்த சிவகார்த்திகேயன் ஓடிவந்து மருத்துவமனையில் அவரது கைகளை பற்றி கொண்டு நான் இருக்கிறேன் கவலைப்படாதீர்கள் என்று கூறிய காட்சியை இன்னமும் என்கண்முன்னே அப்படியே நிற்கிறது.
நம்பிக்கையாகவே நின்று காட்டும் தம்பிக்கு நன்றி” என்று பதிவிட்டிருக்கிறார் அவரின் பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலர் சிவகார்த்திகேயன் செயலை பாராட்டி வருகின்றனர்.


