in

சுயசேவைப்பிரிவு விற்பனை பிரிவகம் திறப்பு விழா

சுயசேவைப்பிரிவு விற்பனை பிரிவகம் திறப்பு விழா

 

மயிலாடுதுறை கூட்டுறவு சங்கத்தில் புதிதாக சுயசேவைப்பிரிவு விற்பனை பிரிவகத்தை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நாராயண பிள்ளை தெருவில் மயிலாடுதுறை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை அலுவலகத்தில் சுயசேவைப்பிரிவு விற்பனை பிரிவகம் திறப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்க மண்டல இணை பதிவாளர் தயாள விநாயகன் அமுல்ராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

பின்னர் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இதில் கூட்டுறவு துணை பதிவாளர் அண்ணாமலை, மயிலாடுதுறை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை துணை பதிவாளர் பன்னீர்செல்வம் மற்றும் கூட்டுறவு சங்க அதிகாரிகளும், பணியாளர்களும் பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

What do you think?

நடிகர் ஆர்யா ஹோட்டல்…. களில் வருமான வரி சோதனை

கிராம கோவிலை இந்து சமய அறநிலையத்துறையில் ஒப்படைக்க கூடாது