in

பிரண்டைகுளம் ஸ்ரீ செந்தில் ஆண்டவர் திருக்கோவிலில் வைகாசி மாத உற்சவ விழா

பிரண்டைகுளம் ஸ்ரீ செந்தில் ஆண்டவர் திருக்கோவிலில் வைகாசி மாத உற்சவ விழா

 

பிரண்டைகுளம் ஸ்ரீ செந்தில் ஆண்டவர் திருக்கோவிலில் வைகாசி மாத உற்சவ விழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை அருகே உள்ள பிரண்டைகுளம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ செந்தில் ஆண்டவர் சுவாமி திருக்கோவிலில் வைகாசி மாத உற்சவ திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

முன்னதாக மூலவர் செந்தில் ஆண்டவர் சுவாமிக்கு சந்தன காப்பு சாற்றி சிறப்பு அலங்காரம் நடைபெற்றன. தொடர்ந்து கோவில் மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை தேவியர்களை சர்வ அலங்காரத்தில் மனக்கோளத்தில் எழுந்தருள செய்தனர்.

இதனைத் தொடர்ந்து திருக்கல்யாண வைபவத்தில் சுவாமிக்கு பூனல் அணிவித்தல் காப்பு கட்டுதல் கன்னிகாதானம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்று சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தெய்வானை மற்றும் வள்ளி தேவியர்களுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டன.

பின்னர் மாலைமாற்று வைபவம் நடைபெற்று உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாணத்தை கண்டு முருகப்பெருமானை வழிபாடு செய்தன.

What do you think?

சுவாமிமலையில் வைகாசி மாத பௌர்ணமி கிரிவலம்

கூலி படத்தின்.. …character குறித்து சொன்ன நடிகர் ஆமிர் கான்