இன்று நடிகர் ஷைன் டாம் சாக்கோ தந்தை ..யின் இறுதி சடங்கு
வெள்ளிக்கிழமை, மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ தனது குடும்பத்தினருடன் சேலத்திற்கு பயணம் செய்தபோது அவரது கார் விபத்துக்குள்ளானது.
அவரது தந்தை சிபி சாக்கோ இறந்துவிட்டார், நடிகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சேலத்தில் நடந்த விபத்துக்குப் பிறகு சாக்கோ…வின் தந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பே இறந்துவிட்டார்.
சாக்கோவின் உடல் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஷைனும் அவரது குடும்பத்தினரும் இன்று’ நடக்கும் இறுதிச் சடங்கிற்காக திருச்சூர் செல்கின்றனர். நடிகர் ஷைன் டாம்..க்கு ஒரு சில தினங்களில் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று தெரிவித்துள்ள நிலையில் தன் தந்தையின் மறைவு குறித்து ஷைன் டாம் சாக்கோ கூறியதாவது இரவு முழுவதும் என் தந்தை ஜோக் அடித்து எங்களுடன் பேசி வந்தார்.
ஆலங்குழாய் ..இல் நிறுத்தி இரவு உணவு சாப்பிட்ட பிறகு மாத்திரை போட்டு கொஞ்ச நேரத்தில் தூங்கிவிட்டேன் காலையில் விபத்து நடந்த போது தான் விழிப்பு வந்தது என்ன நடந்தது என்று என்னால் உணர முடியவில்லை என் தந்தை இரவு முழுவதும் என்னுடன் பேசி வந்தவர் கண் விழிக்கும் போது உயிருடன் இல்லை என்று வருத்ததுடன் பதிவிட்டுள்ளார்.


