in

காமாட்சி அம்மன் கோயில் தீமிதி உற்சவம்

காமாட்சி அம்மன் கோயில் தீமிதி உற்சவம்

 

மயிலாடுதுறை அருகே பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோயில் தீமிதி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கருவாழக்கரை கிராமத்தில் காமாட்சியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் தீமிதி திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த 28-ஆம் தேதி நடைபெற்றது.

பின்னர் சுவாமி வீதியுலா மற்றும் சிறப்பு அபிஷேகம் உள்ளிட்டவை தொடர்ச்சியாக நடைபெற்ற நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி உற்சவம் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு விரதம் இருந்த பக்தர்கள் காவிரி ஆற்றங்கரையில் இருந்து கங்கணம் கட்டிக்கொண்டு ஊர்வலமாக மேள வாத்தியங்கள் முழங்க ஆலயத்தை வந்தடைந்தனர்.

பின்பு ஆலயத்தில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

இரண்டாம் திருமணம் செய்த நடிகர் கிருஷ்ணா

கொடைரோடு அருகே ஊத்துப்பட்டியல் கருப்பணசாமி கோவில் வைகாசி திருவிழா