ஸ்ரீலீலா..விற்கு திருமணமா?
கன்னடத் திரைப்படங்களில் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கிய ஸ்ரீலீலா, விரைவில் தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக ஆனார்.
தனது வெற்றிப் படமான தமகா மூலம், பிரபலமடைந்தவர், பாலிவுட்டிலும், கார்த்திக் ஆர்யன்..னுடன் இணைந்து நடித்து வருகிறார்.
அவர் தமிழிலும் நடிக்கிறார், இன்று மிகவும் பரபரப்பான இளம் நடிகைகளில் ஒருவர் ஸ்ரீ லீலா.
ஸ்ரீலீலா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் சில புகைப்படங்களைப் பகிர்ந்தது, அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது., Big Day for me… Coming Soon என்ற Caption,,,னுடன் அவர் அழகான சேலை அணிந்து, மணப்பெண் போல தோற்றமளித்தார்.
ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக ரசிகர்களை நினைக்க வைத்தது! அந்த புகைப்படங்கள் திருமணத்திலோ அல்லது நிச்சயதார்த்தத்திலோ எடுக்கப்பட்டவை அல்ல என்பது பிறகு தெரியவந்தது.
அவை தெலுங்கு திதி (சந்திர நாட்காட்டி) அடிப்படையில் அவரது பிறந்தநாள் கொண்டாட பட்ட போது எடூக்கபட்டதாம். அவரது உண்மையான பிறந்த நாள் ஜூன் 14 அன்று என்றாலும், அவரது குடும்பத்தினர் பாரம்பரியமுறை படி கொண்டாடுகிறார்கள்.
இதற்கு விளக்கம் அளித்த ஸ்ரீலீலா எங்கள் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் எடுக்கபட்ட புகைப்படம் எனக்கு திருமணம் ஆக இன்னும் நாட்கள் இருக்கிறது ரசிகர்களுக்கு சொல்லாமல் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றார்.


