in

ஸ்ரீ கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோவிலில் வைகாசி விசாக பெருவிழா

ஸ்ரீ கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோவிலில் வைகாசி விசாக பெருவிழா

 

நாட்டரசன் கோட்டை ஸ்ரீ கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோவிலில் வைகாசி விசாக பெருவிழா இரண்டாம் திருநாள் கண்ணுடைய நாயகி அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோவிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு இரண்டாம் திருநாளில் உற்சவர் கண்ணுடைய நாயகி அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

முன்னதாக திருநாள் மண்டபத்தில் உற்சவர் கண்ணுடைய நாயகி அம்மன் சர்வ அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று அலங்கார தீபம் நாகதீபம் கும்ப தீபம் நட்சத்திர தீபம் பஞ்சமுக தீபம் மற்றும் ஷோடச உபச்சாரங்கள் நடைபெற்று உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்யப்பட்டன.

நிறைவாக ஏழு முக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன பின்னர் மங்கள வாத்தியங்கள் மற்றும் வானவெடிகளுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மின்னொழியில் பவனி வந்த கண்ணுடைய நாயகி அம்மனுக்கு ஏராளமான பக்தர்கள் அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.

What do you think?

கலைஞரின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு இலவசமாக தக்காளிகள் வழங்கப்பட்டது

பிரபாஸ் …ன்‘தி ராஜா சாப்’ ரிலீஸ் தேதி வெளியானது