நடிகர் விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா அறிமுகமாகும் ‘ஓஹோ எந்தன் பேபி’
நடிகர் விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா அறிமுகமாகும் தமிழ்ப் படம் ‘ஓஹோ எந்தன் பேபி’.
படத்தில் நாயகியாக ‘திரிபங்கா’, ‘ஓரி தேவுடா’ படத்தில் நடித்த நடிகை மிதிலா பால்கர், தமிழில் அறிமுகமாகிறார்.
வியாழக்கிழமை, படத்தின் Glimpse...சை தயாரிப்பாளர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.
இந்தப் படம் ஜூலை இல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கிய இப்படத்தை விஷ்ணு விஷால் தயாரித்திருகிறார்.
பழைய பாடலான ஓஹோ எந்தன் பேபி பாடலும் படத்தில் இடம்பெருகிறது. நடிகர் விஷ்ணு விஷால்….. இது வரை 21 படங்களில் நான் நடித்திருக்கிறேன் ஆனால் என் தம்பி முதல் படத்திலிருந்து முத்த காட்சியில் நடித்து விட்டான் என்று பொறமையோடு கூறினார்.
விஷ்ணு விஷால் நடிகராகவும் அவரது தம்பி உதவி இயக்குனராகவும் இப்படத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தில் அஞ்சு குரியன், மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன், கீதா கைலாசம், பாலாஜி சக்திவேல், சுஜாதா பாபு, நிர்மல் பிள்ளை, நிவாஷினி, அருண் குரியன், விஜயசாரதி, கஸ்தூரி, வைபவி டான்டில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் வாங்கி இருக்கிறது.


