முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமபந்தி
முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமபந்தி நடைபெற்றது. 44 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமையில் 1434 ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமபந்தி ) கடந்த மே.20 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இதில் ஒவ்வொரு வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா ,குடும்ப அட்டை உள்ளிட்டவைகளுக்கு மனு அளித்திருந்தனர்.
இறுதி நாளான இன்று காக்கூர் கருமல், புளியங்குடி, பொசுக்குடி பிராபுக்களூர் உள்ளிட்ட பொதுமக்கள் மனு அளித்தனர்.
பட்டா மாறுதல் 29 நபர்களுக்கும், முதியோர் உதவித்தொகை 8 நபர்களுக்கும், குடும்ப அட்டை 7 நபர்கள் உட்பட 44 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கினார்.
நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் வட்டாட்சியர் கோகுல்நாத், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் மரகதமேரி, உள்ளிட்ட வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


