in

 சிறுமளஞ்சி உச்சினிமாகாளியம்மன் கோவில் கொடை விழா

 சிறுமளஞ்சி உச்சினிமாகாளியம்மன் கோவில் கொடை விழா

 

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே சிறுமளஞ்சி உச்சினிமாகாளியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி எடுத்து மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து நேர்ச்சை செலுத்தினர்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே சிறுமளஞ்சியில் உச்சினிமாகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது.

இக்கோயில் கொடை விழாவை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் உலக நன்மை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் கடந்த ஒரு வாரமாக காப்பு கட்டி விரதம் இருந்து தீச்சட்டி கையில் ஏந்தியும் தலையில் அலங்கரிக்கப்பட்ட சுவாமி அம்மன் உருவத்துடன் கூடிய முளைப்பாரிகளை சுமந்து மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து நேர்ச்சை செலுத்தினர்.

இதனை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்த பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

What do you think?

தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு பூஜைகள்

ஸ்ரீ மங்களாம்பிகா சமேத ஸ்ரீ மங்களாங்குரேஸ்வரா் சுவாமி திருக்கோவில் மண்டலபூஜை அபிஷேக ஆராதனை