in

அழகாபுத்தூரிலுள்ள அருள்மிகு திரெளபதி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா

அழகாபுத்தூரிலுள்ள அருள்மிகு திரெளபதி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா

 

கும்பகோணம் அருகே அழகாபுத்தூரிலுள்ள அருள்மிகு திரெளபதி அம்மன், ஆலயத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள்.

கும்பகோணம் அருகே அழகா புத்தூர் மெயின் ரோட்டில் உள்ள மிகவும் பிரசித்தி அருள்மிகு திரெளபதி அம்மன், ஆலயத்தில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம் அதுபோல இவ்வாண்டு இவ்விழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் தருமார் பிறப்பு, அம்மாள் பிறப்பு, அம்மன் கல்யாணம், அல்லி கல்யாணம், சுபத்ரா கல்யாணம், அரவான் கல்யாணம், கர்ணன் மோட்சம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முக்கிய நிகழ்ச்சியான இன்று தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பூக்குழியில் இறங்குதல் எனும் தீமிதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள்.

நாளை மஞ்சள் நீர் விளையாட்யுடன் இவ்வாண்க்கான சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் நாட்டாண்மைகள் பஞ்சாயத்தார்கள் இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர். தீமிதி திருவிழாவை காண சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

நீரில் முழுகி நெல் பயிர்கள் முளைத்ததால் விவசாயி வேதனை

ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெறும் என சாய் தன்ஷிகா விஷால் அறிவிப்பு