நீரில் முழுகி நெல் பயிர்கள் முளைத்ததால் விவசாயி வேதனை
செஞ்சி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் தொடர்ந்து மூன்று நாட்கள் பெய்த கன மழையில் பலவேறு இடங்களில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான தாளடி நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் முழுகி நெல் பயிர்கள் முளைத்ததால் விவசாயி வேதனை…

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி,மேல்மலையனூர் தாலுக்காவில் உள்ள கிராமங்கள் பெரும்பாலும் விவசாயம் நிறைந்த பகுதியாகும் இங்கு வாழும் விவசாயிகள் நெல், மணிலா, கரும்பு, கேழ்வரகு, பாசிப்பயிர் போன்ற உணவு தானியங்களை பயிரிட்டு வருகின்றனர்.
இப்பகுதியில் தொடர்ந்து மூன்று நாட்கள் பெய்த கன மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் நீரில் முழிகின.
செஞ்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களான சேர்விலாகம், தொட்டியூர், கவரை, கோனை, சிறுணாம்பூண்டி, சேரனூர், ஓதியத்தூர், பெருங்காப்பூர், தின்னலூர், உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் பயிரிடப்பட்ட தாளடி நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் முழுகி நிலத்திலேயே நெல் மணிகள் முளைத்ததால் விவசாயிகள்பெரும் வேதனைக்கு உள்ளாகினர்.

ஒரு ஏக்கருக்கு 25,ஆயிரம் முதல் 35 வரை செலவு செய்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி இருப்பதால் மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக வேதனை தெரிவிக்கும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.


