குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை — மழையின் காரணமாக வறண்டு கிடந்த குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து தொடங்கியது.
தென்காசி மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் சுட்டரித்து காணப்பட்டது. தற்போது நேற்று இரவு பல்வேறு இடங்களில் லேசான சாரல் மழை ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்து வந்தது.
இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக குற்றாலம் வெயிலின் தாக்கம் காரணமாக முற்றிலுமாக வறண்டு காணப்பட்ட நிலையில் நேற்று பெய்த மழையின் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது.
அந்த வகையில் குற்றாலத்தில் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து சற்று அதிகமாக கொட்டி வருவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பழைய குற்றாலம், ஐந்தருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து சீரானதை தொடர்ந்து பகுதிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.

மேலும் குற்றாலத்தில் ஓரிரு வாரங்களில் சீசன் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே மழையின் காரணமாக தண்ணீர் கொட்டத் தொடங்கியது பொதுமக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


