விலை வீழ்ச்சியின் காரணமாக பூக்களை சாலையோரத்தில் கொட்டி விட்டு செல்லும் விவசாயிகள்
பூக்களின் விலை வீழ்ச்சியின் காரணமாக பூக்களை சாலையோரத்தில் கொட்டி விட்டு செல்லும் விவசாயிகள் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை
தமிழகத்தின் ஹாலந்த் என்று அழைக்கப்படுவது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக அளவு மல்லிகை முல்லை கனகாம்பரம் பிச்சிப்பூ சம்பங்கி ரோஜா உள்ளிட்ட அனைத்து வகை பூக்களும் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
விவசாயம் செய்யப்பட்ட பூக்கள் அனைத்தும் திண்டுக்கல் மாநகராட்சிக்கு ஒரு கட்ட அண்ணா பூச்சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் அதேபோல் நிலக்கோட்டை பூச்சந்தைக்கும் தினந்தோறும் விவசாயிகள் கொண்டு சென்று விற்பனை செய்வது வழக்கம் இங்கிருந்து தமிழக மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் தினம் தோறும் பூக்கள் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருவிழா மற்றும் முகூர்த்த காலங்கள் இல்லாத காரணத்தால் தற்போது பூக்களின் விலகி கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. சம்பங்கி பத்து ரூபாய் அரளிப்பு 30 ரூபாய் பட்டு ரோஜா 40 ரூபாய் விருச்சிப்பு 40 ரூபாய் மல்லிகை கிலோ 300 ரூபாய் முல்லைப்பூ கிலோ 150 ரூபாய் கனகாம்பரம் 300 ரூபாய் என பூக்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது.
விவசாயிகள் வேலையாளர்களுக்கு சம்பளம் கொடுத்தும் வாகனத்திற்கு வாடகை கொடுத்தும் பூக்களை பூச்சந்தைக்கு கொண்டு வந்த நிலையில் பூக்களை வாங்க வியாபாரிகள் யாரும் முன் வராதால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் கொண்டு வந்த பூக்களை வாகனத்துடன் கொண்டு சென்று திண்டுக்கல் வத்தலகுண்டு சாலையில் குட்டியபட்டி பிரிவு அருகே மூடை மூடையாக கொண்டு வந்த அனைத்து பூக்களையும் கீழே கொட்டி விட்டு சென்றனர்.
கடந்த பல வருடங்களாக திண்டுக்கல் மாவட்ட பூ விவசாயிகள் நிரந்தர விலை நிர்ணயம் செய்ய வேண்டும் வாசன திரவிய ஆலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தல தமிழக அரசு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இருக்காதால் தற்போது பூக்களின் விலை வீழ்ச்சியின் காரணமாக சாலையில் பூக்கள் கொட்டி சென்றது பொதுமக்களிடையும் விவசாயிகளிடமும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.


