in

செஞ்சியில் பாஜகவினர் தேசியக்கொடியை ஏந்தி  யாத்திரை பேரணி

செஞ்சியில் பாஜகவினர் தேசியக்கொடியை ஏந்தி  யாத்திரை பேரணி

 

செஞ்சியில் பாஜகவினர் தேசியக்கொடியை ஏந்தி  யாத்திரை பேரணி – பாகிஸ்தான் மீதான ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில்  பாஜகவினர் தேசிய கொடியை ஏந்தி பாகிஸ்தான் மீதான ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக யாத்திரை பேரணி நடைபெற்றது.

தீவிரவாதிகளுக்கு எதிரான செந்தூர் ஆபரேஷன் வெற்றி பெற்றதையும் முன்னிட்டு பாரத பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசுக்கும் அந்த வெற்றிக்கு முழு முதல் காரணமாக இருந்த முப்படை ராணுவ வீரர்களுக்கும் நன்றி தெரிவித்து செஞ்சி தொகுதி பாஜக சார்பாக செஞ்சி பேரூராட்சி அலுவலகம் எதிரே உள்ள குளக்கரையில் இருந்து காந்தி பஜார் பேருந்து நிலையம் வழியாக விழுப்புரம் சாலை தீயணைப்பு நிலையம் அலுவலகம் வரை மூவர்ண கொடியான தேசியக் கொடியை ஏந்தி  யாத்திரை பேரணி நடைபெற்றது.

செஞ்சி கிழக்கு ஒன்றிய தலைவர் தாராசிங் என்கின்ற சிவக்குமார் தலைமையில் மாவட்ட தலைவர் கே.ஆர் விநாயகம் மாவட்ட பொதுச் செயலாளர் கே.பாண்டியன் மாவட்ட பொதுச் செயலாளர் ஜி.அன்பழகன் மாவட்ட பொருளாளர் பிரேம்குமார் முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் எத்திராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்

இந்நிகழ்ச்சியில் தரணி தண்டபாணி கல்வி நிறுவனரும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வழக்கறிஞர் தண்டபாணி, முன்னாள் ராணுவ பிரிவு மாநில செயலாளர் வசந்தகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர் எஸ் சரவணன் மற்றும் ஞானமணி, மாவட்ட செயலாளர் சிவகாமி, முத்துலட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினர் மேகலா ஜெயின், வழக்கறிஞர் ஆர் ஆர் கே செந்தில் வழக்கறிஞர் ராஜா, மாநில வர்த்தக பிரிவு செயலாளர் ஜின்ராஜ், மாநில இளைஞர் அணி செயலாளர் தினேஷ் குமார், செஞ்சி தெற்கு ஒன்றிய தலைவர் அசோக்குமார், செஞ்சி மேற்கு ஒன்றிய தலைவர் சரவணன், மேல்மலையனூர் மேற்கு ஒன்றிய தலைவர் ஆர்.வி ஏழுமலை செஞ்சி கிழக்கு முன்னாள் ஒன்றிய தலைவர் தங்கராமு, வல்லம் தெற்கு ஒன்றிய தலைவர் எழிலரசன்,வல்லம் வடக்கு ஒன்றிய தலைவர் நேமி தாஸ் திண்டிவனம் நகரத் தலைவர் வெங்கடேச பெருமாள், மற்றும் நிர்வாகிகள் பொன்பத்தி ராஜேந்திரன், சந்திரசேகர், ஸ்ரீரங்கன், சத்தியசீலன், மோகன், ஜெயபிரகாஷ், ரமேஷ், பெருமாள், முனுசாமி, செந்தில்குமார் கௌசிகன், கே சரவணன், பசுமலை, ராமச்சந்திரன், அஜித்குமார், வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டு பாரத் மாதாகி ஜே … பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்க… என கோஷங்கள் தெரிவித்து பேரணியாக சென்றனர்.

What do you think?

சாமியார்பட்டி அருள்மிகு ஶ்ரீ வாராஹி அம்மன் திருக்கோவில் வைகாசி மாத தேய்பிறை பஞ்சமி

விஜய் தேவரகொண்டா வெளியிட்ட எமோஷனல் பதிவு