ராணுவ வீரர்கள் வயித்தெரிச்சல் உன்னை சும்மா விடாது! முன்னாள் ராணுவத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ராணுவ வீரர்கள் வயித்தெரிச்சல் உன்னை சும்மா விடாது நீ எங்கு தேர்தலில் நின்றாலும் உன்னை தோற்கடிக்கும் செல்லூர் ராஜு எதிராக பேசிய முன்னாள் ராணுவத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
இந்தியா பாகிஸ்தான் போரின் போது ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டார்களா என ராணுவத்தினரை கேலியாக விமர்சனம் செய்த அதிமுக எம்எல்ஏ செல்லூர் ராஜுவை கண்டித்து சிதம்பரம் காந்தி சிலை அருகில் 40க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் செல்லூர் ராஜு மன்னிப்பு கேட்க வேண்டும் அதேபோன்று கட்சி தலைமை எடப்பாடி பழனிச்சாமி மன்னிப்பு கூற வேண்டுமென கோசங்களை எழுப்பினர், முன்னதாக பேசிய ராணுவ வீரர் ஒருவர் ராணுவ வீரர்களின் வயித்தெரிச்சல் உன்னை சும்மா விடாது எனவும் நீ எங்கு தேர்தலில் நின்றாலும் உன்னால் பூஜ்ஜியம் மட்டுமே வாங்க முடியும் எனவும் தேர்தலில் வெற்றி பெற முடியாது எனவும் ராணுவ வீரர் ஒருவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.


