ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் கலந்து கொண்ட முன்னணி பிரபலங்கள்
மே 9, 2025 அன்று நடைபெற்ற ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ரவி மோகன், திரைப்பட இயக்குனர் மணிரத்னம் மற்றும் அரசியல்வாதிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்தினர்.
இன்று காலை, நடைபெற்ற தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் பிரீதா மற்றும் லஷ்வின் குமார் ஆகியோரின் திருமணத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர்.
சென்னை ஈ.சி.ஆரில் உள்ள ஆடம்பர திருமண மண்டபத்தில் நட்சத்திரங்கள் சூழ திருமணம் நடைபெற்றது. ஐசரி கே கணேஷ் Vels கல்வி நிறுவனத்தின் நிறுவனர், தலைவர்.
மறைந்த அவரது தந்தை , நடிகர், மற்றும் முதலமைச்சர் எம் ஜி ராமச்சந்திரனின் மாநில அரசாங்கத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஐசரி வேலனின் நினைவாக 1992 ஆம் ஆண்டு வேள்ஸ் கல்வி அறக்கட்டளையை நிறுவினார்.
ஐசரி வேலனின் பேரன் வருணும் ஒரு நடிகர். மெகா பட்ஜெட் படங்களை இயக்குவதில் பெயர் பெற்ற ஐசரி கணேஷின் வரவிருக்கும் படங்களான ஜெனி, மூக்குத்தி அம்மன் 2, தயங்கரம் மற்றும் தனுஷ்…ஷை வைத்து ஒரு படமும் இயக்குகிறார்.


