ஜோடி ஆர் யூ ரெடி Trophy..யை வென்ற ஜோடி
Vijay Tv…இன் பிரபலமான ரியாலிட்டி ஷோவின் இரண்டாவது சீசன் ஞாயிற்றுக்கிழமை (மே 4) முடிவடைந்தது.
12 ஜோடிகளுடன் துவங்கிய இந்நிகழ்சியி, மூன்று மாதங்களுக்கும் மேலாக பார்வையாளர்களை மகிழ்வித்த, பிளாக்பஸ்டர் இறுதிப் போட்டியுடன் முடித்தது.
ஜோடி ஆர் யூ ரெடி சீசன் 2 இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (மே 4) பிற்பகல் 3 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. வெற்றியாளரின் பெயர் மாலையில் அறிவிக்கப்பட்டது.
அறிவிப்பு முடிவுகளுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ரம்பா, நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் மற்றும் ஸ்ரீதேவி விஜய்குமார் நடுவர்களாக இருந்தனர்.
ரியோ ராஜ் மற்றும் ஏஞ்சலின் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். அபினவ்-ராணி குமாரி, கௌரி சங்கர்-அனன்யா, குருநாத்-அருணிமா, அவினாஷ்-தீஷால் மற்றும் விஜய்-ஷ்ரேயா ஆகியோர் finalist…டாக போட்டியிட்டனர். ஐந்து போட்டியாளர்கலும் மேடையில் வெறித்தனமாக ஆடி, ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.
ஜோடி ஆர் யூ ரெடி 2025 போட்டியின் வெற்றியாளர் கோப்பையை ராணி குமாரி மற்றும் அபினவ் ஆகியோர் வென்றுள்ளனர். 5 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்பட்டது.


