மதுரை கூடழலகர் பெருமாள் கோவிலில் ஐப்பசி மாத ஊஞ்சல் உற்சவம் கோலாகலம்
பக்தர்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம்
மதுரை கூடழலகர் பெருமாள் கோவிலில் ஐப்பசி மாத ஊஞ்சல் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் தம்பதி சமேதரராய் ஊஞ்சலில் காட்சியளித்த பெருமாளை பக்தர்கள் ஏராளமானோர் வழிபாடு செய்தனர்.
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றானதும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமான மதுரை கூடழலகர் பெருமாள் கோவிலில் நடைபெறும் சிறப்பு பெற்ற விழாகளில் ஒன்றான ஐப்பசி ஊஞ்சல் ஊற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
அஷ்டாங்க விமானத்தின் கீழ்தளத்தில் கூடலழகர் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் சிறப்பு பெற்ற இக்கோவிலில் ஐப்பசி ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு முன்னதாக உற்சவர் சுந்தர்ராஜப் பெருமாள், ஸ்ரீதேவி. பூதேவி தாயார்களுடன் தம்பதி சமேதரராய் பல்லக்கில் தீவட்டி பரிவாரங்களுடன் கோவில் உள் பிரகாரத்தை வலம் வந்து கோவில் ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருளினார்.
தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜைகளையடுத்து வண்ண மலர் மாலைகள் மற்றும் ஆபரணங்கள் சூடி ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தார்
இதனையடுத்து பொருமாளுக்கு அடுக்கு தீபம் உள்ளிட்ட பல்வேறு தீபாராதனைகள் காட்டப்பட்டது.
காண கண் கொள்ளா காட்சியாக ஸ்ரீதேவி. பூதேவி தாயார்களுடன் தம்பதி சமேதரராய் ஊஞ்சலில் காட்சியளித்த பெருமாளை பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

