in

திரௌபதி அம்மன் கழுத்தில் இருந்த 8 கிராம் திருமாங்கல்யம் திருட்டு

திரௌபதி அம்மன் கழுத்தில் இருந்த 8 கிராம் திருமாங்கல்யம் திருட்டு

 

நாகை அருகே வடக்குப் பொய்கை நல்லூர் திரௌபதி அம்மன் ஆலயத்தில் அம்மன் கழுத்தில் இருந்த 8 கிராம் திருமாங்கல்யம் திருட்டு சிசிடிவி காட்சிகள்

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த வடக்கு பொய்கைநல்லூரில் பழமை வாய்ந்த ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது இந்த ஆலயத்தில் நேற்று உள்ளே புகுந்த மர்ம நபர் துரோபதி அம்மன் கழுத்தில் இருந்த 8 கிராம் தங்க மாங்கல்யத்தை திருடிச் சென்றுள்ளான்.

இன்று காலை உள்ளே சென்று பார்த்த அர்ச்சகர் அம்மன் கழுத்தில் இருந்த திருமாங்கல்யம் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அர்ச்சகர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

முன்னதாக கோரக்க சித்தர் ஆலயத்தில் உள்ளே சென்று சித்தர் கழுத்தில் ருத்ராட்சை மாலை மட்டுமே அணிந்திருந்ததால் ஏமாற்றமடைந்து வந்த நிலையில் இந்தக் கோவிலில் திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மேலும் நாகப்பட்டினம் டவுன் காவல் நிலையத்தில் கோயில் அறங்காவலர் ஜெயசீலன் புகார் அளித்துள்ளார் திருடி சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What do you think?

செஞ்சி அருகே மின்சாரம் தாக்கியதில் எட்டாம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழப்பு

தேய்பிறை அஷ்டமி கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை