in

நத்தம் டாஸ்மாக் கடையில் புகுந்த 8 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு

நத்தம் டாஸ்மாக் கடையில் புகுந்த 8 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு

 

நத்தம் டாஸ்மாக் கடை அருகே புகுந்த 8 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு. பீதியில் பணியாளர்கள்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வீமாஸ் நகர் அருகே அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.

அந்தக் கடைக்கு அருகிலேயே பார் செயல்பட்டு வந்தது. தற்போது பார் செயல்பட அனுமதி இல்லாத காரணத்தால் அந்த கட்டிடத்தில் பழைய பொருட்களும் அட்டை பெட்டிகளும் வைக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடை அடர்ந்த காட்டு பகுதியில் இருப்பதால் அங்கு அடிக்கடி விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாகவே காணப்படும். இந்நிலையில் இன்று வழக்கம் போல் கடையை திறக்க வந்த டாஸ்மாக் பணியாளர்கள் அருகிலுள்ள செயல்படாத பார் கட்டிடத்தில் இருந்த காவலரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி சென்று பார்த்தனர்.

அப்போது கட்டிடத்தின் ஒரு மூளையில் சுமார் 8 அடி நீளமுள்ள கருஞ்சாரை பாம்பு ஒன்று சுருண்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியில் உறைந்து போன டாஸ்மாக் கடை பணியாளர்கள் நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த நத்தம் தீயணைப்பு வீரர்கள் பாம்பு பிடிக்கும் கருவி மூலம் 8 அடி நீளமுள்ள கருஞ்சாரைப் பாம்பை பிடிக்க முயன்றனர். அப்போது அவர்களுக்கு பிடி கொடுக்காத பாம்பு அங்கும் இங்கும் சென்று தப்பிக்க முயன்றது.

தப்பவிடாமல் பாம்பை சுற்றி வளைத்த வீரர்கள் மிகவும் லாவகமாக பிடித்து சாக்கு பைக்குள் அடைத்து நத்தம் வனத்துறையினர் வசம் ஒப்படைத்தனர்.

உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அவ்வப்போது பாம்புகள் நடமாடும் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என டாஸ்மாக் பணியாளர்கள் கூறி வருகின்றனர்.

What do you think?

என்னை தப்பா பேசினா பிளாக் செய்துவிடுவேன்

STUNT மாஸ்டர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் இயக்குனர் பா. ரஞ்சித் இன்று கோர்ட்டில் ஆஜார்