கலை நிகழ்ச்சிகளுடன் கலை கட்டிய 79, வது சுதந்திர தின விழா
நாகையில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கலை கட்டிய 79, வது சுதந்திர தின விழா. சிறப்பாக செயல்பட்ட காவலர்கள் கௌரவிக்கப்பட்டு, 60 பயனாளிகளு 94, லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் ஆகாஷ் வழங்கினார்.

இந்திய திருநாட்டின் 79-வது சுதந்திர தின விழா நாகப்பட்டினத்தில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், ஆட்சியர் ஆகாஷ் தேசிய கொடியை ஏற்றிவைத்து, காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
அதனை தொடர்ந்து, சமாதான வெண்புறாவை பறக்க விட்ட ஆட்சியர், சட்டம் ஒழுங்கில் சிறப்பாக செயல்பட்ட காவலர்கள் கௌரவிக்கப்பட்டு , 60 பயனாளிகளுக்கு 94, லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர் வழங்கினார்.
அதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் கலை கட்டின இதில் நாட்டுப்புறப் பாடல் தேச பக்தி பாடல் மற்றும் இந்திய கலாச்சார கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர் இவ்வாண்டு நாகை மாவட்டத்தில் எல்லா இடங்களிலும் 79 வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


