in

திருவாடானை அரசு அலுவலகங்களில் 77 வது குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது

திருவாடானை அரசு அலுவலகங்களில் 77 வது குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு நீதிபதி ஆண்டனி ரிஷாந்த் தேவ் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்கள்.

நிகழ்வில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் சுரேஷ், செயலாளர் ஜெகன்  மூத்த வழக்கறிஞர் தனபால், கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.  தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஆண்டி கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்திய இணிப்பு வழங்கினார்கள்.

காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக டிஎஸ்பி சீனிவாசன் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார்கள்.  காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் சதீஸ்பிரபு தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செய்து இனிப்பு வழங்கினார்.

      XZஅரசு துவக்க பள்ளியில் தலைமை ஆசிரியர் கதிரவன் தேசிய கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளர் பாலகுரு தேசிய கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார்கள்.

What do you think?

77வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்

திருவாடானை தீ அணைப்பு மீட்பு பணிகள் நிலையத்தில் குடியரசு தினம் கொண்டாட்டம்