அரசடி விநாயகர் திருக்கோயில் 62-ஆம் வருட ஸம்வத்சராபிஷேக விழா
திண்டிவனம் இரயில்நிலைய ஸ்ரீ ஓம் அரசடி விநாயகர் திருக்கோயில் 62-ஆம் வருட ஸம்வத்சராபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் இரயில்நிலைய ஸ்ரீ ஓம் அரசடி விநாயகர் திருக்கோயில் 62-ஆம் வருட ஸம்வத்சராபிஷேக விழாவை முன்னிட்டு இன்று காலை கோ பூஜையுடன் இனிதே ஆரம்பமாயின.
தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜையில் 108 சங்குகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பல்வேறு வகையான சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து யாக குண்டத்தில் பல்வேறு வகையான திரவிய பொருட்கள் பட்டு வஸ்திரங்கள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் செலுத்தப்பட்டன. தொடர்ந்து பூஜிக்கப்பட்ட கலசங்களுக்கு பூர்ணாஹுதி செலுத்தி பஞ்சமுக தீபாராதனை கற்பூரவர்த்தி காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து கலசங்கள் கோயில் பிரகாரம் வலவந்து மூலவர் ஸ்ரீ ஓம் அரசடி விநாயகருக்கு கலசாபிஷேகம் மற்றும் 108 சங்க அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து வண்ண மலர்கள் கொண்ட அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ ஓம் அரசடி விநாயகருக்கு பஞ்சமுகத்தி பாரதனை கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.