58வது தேசிய நூலக வார விழா புத்தகங்கள் கண்காட்சி
கடலூரில் 58வது தேசிய நூலக வார விழாவை ஒட்டி 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட புத்தகங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன..

கடலூரில் தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை சார்பில் 58வது தேசிய நூலக வார விழா மற்றும் புத்தக கண்காட்சி என்று தொடங்கியது.
23 ம் தேதி வரை நடைபெறும் இந்த புத்தக கண்காட்சி மற்றும் விற்பனையில் அனைத்து பிரிவுகளைச் சார்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் கண்காட்சிக்கும் மற்றும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.
கடலூர் மாவட்ட தமிழ்ச் சங்கம் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்நிகழ்வு கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறுகிறது.

இன்று நடைபெற்ற துவக்க விழாவில் மேயர் சுந்தரி ராஜா மற்றும் துணை மேயர் தாமரைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்து புத்தக விற்பனையையும் தொடங்கி வைத்தனர்.


