in

மல்லியம் ஸ்ரீ மாரியம்மன் கோவிலின் 39 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா

மல்லியம் ஸ்ரீ மாரியம்மன் கோவிலின் 39 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா

 

மல்லியம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலின் 39 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா பச்சைக்காளி பவளக்காளி ஆட்டத்துடன் கோலாகலமாக நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மல்லியம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலின் 39 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 23ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து மாரியம்மன் கரகம், அய்யனார் கரகம், மஞ்சள் காப்பு, மாரியம்மன் பூச்சொரிதல், கஞ்சி வார்த்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை பால்குட திருவிழா இன்று நடைபெற்றது.

முன்னதாக மல்லியம் காவிரிக்கரையில் இருந்து கங்கணம் கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் சக்தி கரகம் முன் செல்ல கூண்டுகாவடிகள், அலகு காவடிகள், பால் குடங்கள் மற்றும் மின் அலங்காரம் செய்யப்பட்ட அம்பாள் ரதம் உள்ளிட்டவற்றை எடுத்து கொட்டும் மழையில் முக்கிய வீதிகள் வழியாக வான வேடிக்கைகள், மேள வாத்தியங்கள் முழங்க கோவிலை வந்தடைந்தனர்.

பின்னர் பக்தர்கள் தலையில் சுமந்து வந்த பாலினை கொண்டு அம்பாளுக்கு சிறப்பு பாலாபிஷேகமும் மகாதீப ஆராதனையும் காண்பிக்கப்பட்டது.

பின்னர் கோயில் வளாகத்தில் பச்சைக்காளி பவளக்காளி ஆட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை மல்லியம் கிராமவாசிகள்,இளைஞர் நற்பணி மன்றத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

What do you think?

வைகாசி ரோகிணி முன்னிட்டு அருள்மிகு ராஜகோபால சுவாமி கோவில் கருட சேவை

72 அடி மகா பிரத்தியங்கிரா தேவிக்கு 12 மணி நேரம் இடைவிடாமல் அபிஷேகம்