350 கிலோ, 5 லட்சம் மதிப்புள்ள ஹான்ஸ் குட்கா பொருட்கள் பறிமுதல்
காட்டுமன்னார்கோவில் அருகே சோழத்தரத்தில் 350 கிலோ, 5 லட்சம் மதிப்புள்ள ஹான்ஸ் குட்கா பொருட்கள் பறிமுதல்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே சோழத்தரத்தில் 350 கிலோ, 5 லட்ச ரூபாய் மதிப்பில் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கடலூரில் ஏற்கனவே மணியரசன் என்பவர் குட்கா பொருட்கள் வைத்திருந்து கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், அவரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் சோழத் தரம் போலீசார் அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சோதனை செய்தனர்.
அப்போது தோப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 350 கிலோ ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் இதனுடன் இருசக்கர வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக வேல்முருகன், பன்னீர்செல்வம் , சிவராஜ் சிங், ஜெயராமன் என நான்கு பேர் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிந்து சிறையில் அடைக்கப்பட்டனர்.


