ஆந்திர பறவைகள் சரணாலயத்திற்கு அனுப்பி வைத்த 3000 அரிய வகை மரக்கன்று
விழுப்புரம்..அனுமந்தை….240 கி.மீ.பயணிக்கும் 3000 அரிய வகை மரக்கன்று…விழுப்புரம் கிராமத்தில் இருந்து ஆந்திர பறவைகள் சரணாலயத்திற்கு அனுப்பி வைப்பு..3 மலைகளை சுற்றி நட்டு வெளிநாட்டு பறவைகளின் இனபெருக்கத்திற்கு உதவிட வனத்துறையினர் நடவடிக்கை…

விழுப்புரம் மாவட்டத்தின் அனுமந்தை கிராமத்தில் இருந்து ஆந்திர பறவைகள் சரணாலயத்திற்கு Barringtonia Acutangula என்பது கடப்பாடி மரம், செங்கடம்பு, நீர் அடந்தை என்று அரிய வகை மரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது..
இந்த மரத்தை நன்னீர் அலையாத்தி மரம் என்று கூட அழைக்கப்படும். இந்த மரமானது ஏரி, குளம், போன்ற இடங்களில் வளரும். குறிப்பாக உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் வளச பறவைகள் வெகுவாக இந்த மரத்தை நாடும்.
ஏனென்றால் இந்த மரம் நீர்ப்பகுதிகளில் நடுவில் வளர்வதால் அந்த மரத்தை சுற்றி நீர் சூழ்ந்து காணப்படுவதினாலும் வலசை பறவைகள் அதனுடைய பாதுகாப்பு கருதி இந்த மரத்தை தேர்வு செய்யும்.
அதேபோன்று இந்த மரத்தின் கிளைகள் மிகவும் நெருக்கமாகவும் மற்றும் மேலும் கீழும் வளைந்து நெளிந்து ஆடுவதாலும் இதில் கூடு கட்டி முட்டை இடுவதற்கு உகந்ததாக இருக்கும் என்று பெலிகன் என்று சொல்லக்கூடிய கூழைக்கிடா, நத்தை கொத்தினாரை, நீர் காகம், கொக்கு, நாரை வகைகள் போன்ற பலவிதமான பறவைகளுக்கு இந்த மரம் இருப்பிடமாக திகழ்கிறது.

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள நெல்லப்பட்டு பறவைகள் சரணாலயத்திற்கு
அனுப்பப்பட்டது..
இதனை விழுப்புரம் மாவட்டத்தின் அனுமந்தை கிராமத்தில் இயங்கும்
யுனிவர்சல் ஈகோ பவுண்டேஷன் நர்சரி இல் இருந்து மூன்றாயிரம் மர செடிகள் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை ஆந்திர வனத்துறையினர் நேரடியாக பார்த்து எடுத்து சென்றனர்.


