மேலூரில் பெரும்பிடுகு முத்தரையரின் 1350வது ஆண்டு சதய விழா பாஜக மாநிலத் தலைவர் மற்றும் மகாராஷ்டிரா ஆளுநர் உள்ளிட்டோர் பங்கேற்று மலர்தூவி மரியாதை.!
மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் முன்பு, பெரும்பிடுகு முத்தரையரின் 1350 ஆம் ஆண்டு சதய விழாவையொட்டி பாஜக சார்பில் மேலூர் பேருந்து நிலையம் முன்பு அவரது திருவுருவம் படம் வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன், மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
முன்னதாக இவர்களுக்கு பூர்ண கும்ப மரியாதை செய்யப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியையொட்டி மேலூர் நகர் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு காவல்துறையினர் போக்குவரத்து மாற்றம் செய்திருந்தனர்.


