திருவாவடுதுறை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும், காத்தவராயன் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது, 3000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை திருவாவடுதுறை ஆதின குருமகா சன்னிதானம் துவக்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த திருவாவடுதுறையில், ஆதினத்துக்கு சொந்தமான ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
ஆலயத்தின் ஆண்டு சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து உற்சவர் அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை எடுத்து காத்தவராயன் சுவாமி விதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீன குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார் தொடர்ந்து தாயாரம்மாள் அறக்கட்டளை சார்பில் 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்யும் சிறப்பு நிகழ்ச்சியை குருமகா சன்னிதானம் தொடங்கி வைத்தார்.