in

சாலையில் ஓடும் கழிவுநீரை மிதித்து செல்லும் பள்ளி மாணவிகள்…..

சாலையில் ஓடும் கழிவுநீரை மிதித்து செல்லும் பள்ளி மாணவிகள்…..

 

கழிவுநீரை சீர் செய்யாமல் மெத்தன போக்கில் செயல்படும் மாநகராட்சி நிர்வாகம்…..

திருவண்ணாமலை தேரடி வீதியில் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஒன்றாம் வகுப்பு முதல் பண்ணிரெண்டாம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் திருவண்ணாமலை, கீழ்நாத்தூர், சேரியந்தல், வேங்கிக்கால், அடிஅண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 3 ஆயிரம் மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நடந்து வரும் மாணவிகள் கொசமட தெரு வழியாக வருகின்றனர்.

கொசமட தெருவில் கழிவு நீர் கால்வாயில் செல்லாமல் சாலையில் செல்கின்றது. அனுதினமும் பள்ளிக்கு வரும் மாணவிகள் கழிவுநீர் மிதித்தும், துர்நாற்றம் வீசும் காற்றை சுவாசித்து வருகின்றனர்.

உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் கழிவுநீர் செல்வதை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What do you think?

மாற்று இடத்திற்கு நகர்த்தப்பட்ட பஞ்ச மூர்த்திகள் மர தேர்

100 டன் எடையுள்ள 45.11 அடி உயரம் கொண்ட பராசக்தி அம்மன் தேர் வெள்ளோட்டம்