இருசக்கர வாகனத்தில் பாதுகாப்பற்ற முறையில் கம்பிகளை எடுத்துச் செல்லும் இளைஞர்கள்
திருவண்ணாமலை அடுத்த சானாநந்தல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சுமார் 12 அடி நீளம் உள்ள 30க்கும் மேற்பட்ட தம்பிகளை ஒன்றாக கட்டி இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் ஏற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த கம்பிகளை டாட்டா ஏசியில் எடுத்து செல்லாமல் இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்றதால் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது போன்று ஆபத்துகளை உணராமல் செல்வதால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக இளைஞர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டதால் வாகன ஓட்டிகளும் சாலையில் செல்லும் பொதுமக்களும் அவதிப்பட்டனர்.

