காதலிக்க வற்புறுத்தி அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபர் போக்சோ வழக்கில் கைது
புவனகிரியில் பள்ளி செல்லும் 16 வயது சிறுமியிடம் காதலிக்க வற்புறுத்தி அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபர் போக்சோ வழக்கில் கைது
கடலூர் மாவட்டம் புவனகிரி முள்ளிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த செல்வமணி (25) என்பவர் பள்ளி செல்லும் 16 வயது சிறுமி ஒருவரை பல நாட்களாக பின் தொடர்ந்து சென்றார் .
பின்னர் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி கையைப் பிடித்து இழுத்து தகராறு செய்து அத்துமீறலில் ஈடுபட்டார்.
இந்நிலையில் வேதனை அடைந்த சிறுமி தனது வீட்டில் தெரிவித்த நிலையில் சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் செல்வமணியை கைது செய்து அவர் மீது போக்சோவில் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.


