சட்டென டென்ஷன் ஆன யோகிபாபு ..புகார்களுக்குப் உடனே பதிலடி… மேடையில் கேட்கப்பட்ட கேள்வி.?
நகைச்சுவை நடிகர் யோகிபாபு மேல ஒரு முக்கியமான குற்றச்சாட்டு அடிக்கடி வருது.
அதாவது, அவர் பட விழாக்களுக்கு (Promotion Events) வர்றதில்லைங்கிறது தான் அது.
சமீபத்துல ஒரு நிகழ்ச்சியில அவர்கிட்ட நேரடியாவே ஒரு கேள்வியைக் கேட்டாங்க: “நீங்க பணம் மட்டும் வாங்கிக்கிறீங்க, ஆனா பெரிய படங்கள் தவிர மத்த சின்னப் படங்களோட ஃபங்ஷனுக்கு வர்றதில்லைன்னு உங்க மேல புகார் வருதே, அது பத்தி என்ன சொல்றீங்க?” இந்தக் கேள்வியைக் கேட்டதும் யோகிபாபு கொஞ்சம் டென்ஷன் ஆகி காரசாரமா பதில் சொன்னாரு: பழைய கதையை ஏன் பேசுறீங்க?: “இது நடந்து எத்தனை நாளாச்சு? ஒரு வாரத்துக்கு முன்னாடி நடந்த விஷயத்தை இப்போ ஏன் கேக்குறீங்க?
இப்போ என்ன நடக்குதோ அதை மட்டும் கேளுங்க. “நல்ல தயாரிப்பாளர்கள் எல்லாருக்கும் நான் எப்பவும் சப்போர்ட்டா தான் இருக்கேன். எனக்கு டைம் இருந்தா கண்டிப்பா பட விழாக்களுக்கு வரப்போறேன்.”
“ஒரு படத்துல நான் வெறும் 4 இல்ல 5 சீன் தான் நடிக்கிறேன். என்னைக் காமெடியனா கூப்பிட்டா வருவேன். ஆனா எனக்கே ஆளுயர கட்-அவுட் எல்லாம் வச்சு கூப்பிட்டா நான் எப்படி வர முடியும்?” வளர்ச்சி வந்தா பிரச்சினை வரும்: “நான் சினிமாவுக்கு வந்து 22 வருஷம் ஆச்சு. ஒருத்தன் வளரும்போது தான் இந்த மாதிரி பிரச்சினைகள் எல்லாம் வரும்னு கேள்விப்பட்டிருக்கேன்.
இப்போ எனக்குப் பிரச்சினைகள் வர்றதால, நான் வளர்ச்சி அடைஞ்சுட்டேன்னு நினைக்கிறேன்.” இப்படித் அவருக்கு எதிரா வர்ற புகார்களுக்கு ரொம்பத் தெளிவா, அதே சமயம் கோபமா பதில் கொடுத்திருக்காரு யோகிபாபு.

