உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி.
உலக யோகா தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் நீதிமன்றம், பா.ஜ.க, பதஞ்சலி அமைப்புகள் சார்பாக யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் சர்வதேச உலக யோகா தினத்தை முன்னிட்டு நீதிமன்றம், பா.ஜ.க, பதஞ்சலி ஆகியவற்றின் சார்பில் யோகா பயிற்சி நடைபெற்றது.
மயிலாடுதுறை ஒருங்கிணைந்த மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி சத்தியமூர்த்தி தலைமையிலும், தலைமை குற்றவியல் நீதிபதி மாயகிருஷ்ணன் முன்னிலையிலும் ஐந்து நீதிபதிகள்.நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்களும், பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு தலைமையிலும், பதஞ்சலி யோகா மையம் சார்பில் யோகா மாஸ்டர் கணேசன் தலைமையிலும் பல்வேறு இடங்களில் யோகா பயிற்சிகள் நடைபெற்றது.
இதில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உடல் ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்புடன் இருக்க யோகா பயிற்சி செய்தனர்.