in

திமுக அரசு மகளிருக்கு மாதம் ஆயிரம் கொடுத்து எங்களிடம் மாதம் ஐந்தாயிரம் பெறுவதாக மகளிர் குமுறல்…

அதிமுக திண்ணை பிரச்சாரத்தில் திமுக அரசு மகளிருக்கு மாதம் ஆயிரம் கொடுத்து எங்களிடம் மாதம் ஐந்தாயிரம் பெறுவதாக மகளிர் குமுறல்…

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி மற்றும் நெய்வேலி சட்டமன்ற தொகுதிகளில், கடலூர் அதிமுக தெற்கு மாவட்டம் சார்பில் இரு தினங்களாக திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது.

இந்த திண்ணை பிரச்சாரம் கழக அமைப்பு செயலாளரும், கடலூர் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமான சொரத்தூர் இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

கிராமந்தோறும் நடைபெற்ற திண்ணை பிரச்சாரத்தில் விழுப்புரம் தகவல் தொழில்நுட்ப தலைவர் மாலதி திமுக ஆட்சியின் உருட்டுகளும் திருட்டுகளும் என்ற பிரச்சாரத்தினை முன்னெடுத்து மக்களினையே பிரச்சாரத்தினை மேற்கொண்டார்.

அப்பொழுது திமுக அரசு கொடுத்து கொண்டிருக்கும் மகளிர் உரிமைத் தொகை எல்லோருக்கும் வழங்கபடுகிறதா என கேட்ட பொழுது பொதுமக்கள் கூறுகையில் எல்லா மகளிருக்கும் மாத உரிமை தொகை கிடைப்பதில்லை எனவும் அப்படியே கிடைத்தாலும் அதற்கு பதிலாக இரு மாதங்களுக்கு ஒரு முறை தாங்கள் மூன்று மடங்கு மின்சார கட்டணம் செலுத்த வேண்டி உள்ளதாகவும், சொத்து வரி, வீட்டு வரி என வரி வரியாக செலுத்த வேண்டி இருப்பதாக திமுக அரசு மீது புகார் தெரிவித்தனர்.

மேலும் மகளிர் விடியல் பயணம் என்ற பெயரில் வரும் பேருந்துகளில் எங்களுக்கு மதிப்பு கிடைப்பதில்லை எனவும் ஓசி பயணம் என்பதால் தாங்கள் அலைகழிக்க படுவதாகவும் புகார் தெரிவித்தனர்.

மேலும் இந்த திண்ணை பிரச்சாரத்தில் அதிமுக ஆட்சியின் போது மக்களுக்கு செய்த நலத்திட்டங்களான அம்மா மருந்தகம், அம்மா ஸ்கூட்டி, அம்மா சிமெண்ட், அம்மா உணவகம், மாணவர்களுக்கு லேப்டாப், சிக்கல், கர்பிணி பெண்களுக்கு வளையகாப்பு, மகபேரு தாய்மார்களுக்கு உட்டசத்து பெட்டகம், விவசாயிகளுக்கு விவசாய கடன் தள்ளுபடி, நகைகடன் தள்ளுபடி உள்ளிட்ட ஏராளமான அதிமுகவின் சாதனைகளை எடுத்து கூறினார்.

மேலும் விழுப்புரம் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஏற்பாட்டில் நெய்வேலி சட்டமன்ற தொகுதி கோரணபட்டு, மதணகோபாலபுரம் கிராமத்தில் நடைபெற்ற இந்த திண்ணை பிரச்சாரத்தில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் எம்.பி.எஸ். சிவசுப்பரணியன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் இராஜசேகர் மற்றும் கள்ளகுறிச்சி தகவல் தொழில்நுட்ப மாவட்ட வினோத், மற்றும் ஒன்றிய செயலாளர் ஜெயசூர்யா, மாவட்ட, ஒன்றிய நகர, கிளைகழக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்..

What do you think?

கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீர்த்தேக்கம் 130 கோடி மதிப்பில் புரனமைப்பு பணியினை அமைச்சர் சி வி கணேசன் தொடங்கி வைத்தார்