Leo Collection..னை முறியடிக்குமா???? கூலி
ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையிடப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம், முதல் காட்சியிலேயே திரையரங்கை அதிர விட்டது .
ரசிகர்கள் ஒரு பண்டிகை போல் கூலி ரிலீஸ்…சை கொண்டாடினர். .+
லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படம், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் இருவரிடமிருந்தும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று, பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
‘கூலி’ திரைப்படம் வெளியான முதல் நான்கு நாட்களில் இந்தியா முழுவதும் ரூ.193.25 கோடி நிகராக வசூலை ஈட்டியுள்ளது.
இரண்டாவது நாளில் வசூல் சற்று குறைந்து ரூ.54.75 கோடியாக இருந்தாலும், வார இறுதியில் படத்தின் வசூல் எகிறியது .
கூலி இப்போது உலகளவில் ரூ.320 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது, இந்த ஆண்டில் அதிகம் வசூல் செய்த முதல் தமிழ் படம்.
இதுவரை மூன்று தமிழ் படங்கள் மட்டுமே ரூ.600 கோடி வசூல் செய்திருக்கிறது…
இதே வேகத்தில் சென்றால் கூலி ரூ.600 கோடி வசூல் செய்ய வாய்ப்பிரூக்கிறது.
கூலி…யின் வெற்றிக்கு மற்றும் ஒரு காரணம் ரஜினிகாந்த்தின் 50…ஆண்டு திரை வாழ்கையை குறி வைத்து எடுக்கபட்ட படம்….
War 2 படத்துடன் கடுமையான போட்டி இருந்தாலும் கூலி தனி காட்டு ராஜா போல் பாக்ஸ் ஆபீஸ்..இல் கெத்து காட்டி வருகிறது.


