in

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு தீபாவளிக்காக தரை கடை போட்டிருக்கும் வியாபாரிகள் அவதி

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக பட்டுக்கோட்டையில் 48 மிமீ, வெட்டிக்காட்டில் 42 மிமீ, அதிராம்பட்டினம் 37 மிமீ, திருவிடைமருதூர் 31 மிமீ, கும்பகோணத்தில் 22 மிமீ என மாவட்டம் முழுவதும் சராசரியாக 323 மிமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது‌.

இந்நிலையில் பிற்பகல் முதல் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது இந்த மழை தற்போது வரை நீடித்து வருகிறது.

மேலும் தீபாவளி பண்டிக்கையை முன்னிட்டு தரை கடை போட்டவர்களின் நிலை தற்போது மிகவும் பரிதாப நிலையில் உள்ளது துணிக்கடை வீட்டு பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் பொதுமக்களை நம்பி போட்டிருக்கிறோம் ஆனால் தற்போது மழை பெய்து வருகிறது.

இதனால் வாங்க வரும் போது மக்கள் பெரிய கடை நோக்கி செல்கின்றனர் இதனால் வியாபரம் தோய்வாக நடைபெறுகிறது என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

லாபம் கூட வேண்டாம் எங்களுக்கு போட்டோ முதல் கிடைத்தால் மட்டும் போதும் இந்த தீபாவளி எங்களுக்கு சோகமான தீபாவளியாக காணப்படுகிறது.

இன்னும் இரண்டு நாட்களில் தீபாவளி வர இருப்பதால் இந்த இரண்டு நாட்களிலும் மழை பெய்யாமல் இருந்தால் நாங்கள் கவலை இல்லாமல் வியாபாரம் செய்து தீபாவளி கொண்டாட முடியும் என வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

மேலும் இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது..

What do you think?

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் விழுப்புரம் மாவட்ட சரக டிஐஜி ஆய்வு

கன மழை காரணமாக தனியார் அரிசி ஆலை மதில் சுவர் இடிந்து விழுந்து ஆடுகள் பலி