in

பிரபல மாடல் அழகி ஏன் தற்கொலை செய்து கொண்டார்…. சிக்கிய கடிதம்


Watch – YouTube Click

பிரபல மாடல் அழகி ஏன் தற்கொலை செய்து கொண்டார்…. சிக்கிய கடிதம்

இந்தியாவின் பிரபல மாடல் அழகி மற்றும் வழக்கறிஞருமான ஷான் ராச்சல் (Shawn Rachel) ஜூலை 13ஆம் தேதி அதிகளவில் தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் இறப்பதற்கு முன்பாக கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்திருக்கிறார்.

பாண்டிச்சேரியை சேர்ந்த மாடல் அழகியன ஷான் ராச்சல் காராமணி குப்பம் பகுதியில் பிறந்தார் 26 வயதாகும் அவர் மாடல் துறையில் பல பட்டங்களை பெற்றவர் .

மிஸ் புதுச்சேரி 2020, மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு 2019, மிஸ் வேர்ல்ட் பிளாக் பியூட்டி, போன்ற பட்டங்களை வென்றுள்ளார்.

இவரின் தாய் இளம் வயதிலேயே இறந்து விட தந்தை தான் வளர்த்திருக்கிறார். அண்மையில் இவருக்கு திருமணமானதும் மாமியார் மற்றும் கணவருடன் புதுச்சேரியில் வசித்து வந்தார்.

ஜூலை 13ஆம் தேதி தனது அறையில் இருந்தவர் நீண்ட நேரம் வெளியே வராததால் சந்தேகம் அடைந்தவர்கள் உள்ளே சென்று பார்த்த பொழுது மயங்கி நிலையில் இருந்தவரை அவரது குடும்பத்தினர் பாண்டிச்சேரி அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.

அங்கிருந்து ஜிப்மருக்கு மாற்றப்பட்டவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து விட்டார்.

வழக்கு பதிவு செய்த போலீசார் ஷான் ராச்சல் வீட்டில் சோதனை செய்தபோது அவர் எழுதிய கடிதம் சிக்கியது தனது மரணத்திற்கு கணவரோ மாமியாரோ காரணம் இல்லை சில காலமாக மன அழுத்தம் மற்றும் பொருளாதார பிரச்சனைகள் அதிகம் உள்ளதால் தற்கொலை செய்துகொண்டேன், பேஷன் நிகழ்ச்சிக்காக நிறைய பணத்தை செலவு செய்து கடன் பட்டதால் இந்த முடிவை எடுத்ததாக எழுதி இருந்தார்.


Watch – YouTube Click

What do you think?

பா. ரஞ்சித் உட்பட நான்கு பேர்மேல் போலிஸ்சார் வழக்கு பதிவு

சூர்யவம்சம் பார்ட் 2 உருவாகிறது