தமிழ் ரசிகர்கள் ஏன் ஆதரவு கொடுக்கவில்லை? இயக்குனர் சேகர் கமுலா வருத்தம்
வெற்றி இயக்குனரான சேகர் கமுலா இயக்கத்தில் வெளியான குபேரா திரைப்படத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஸ்மிகா மந்தனா, உள்ளிட்டோர் நடித்த குபேரா ஜூன் 20ஆம் தேதி வெளியானது.
ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு தமிழில் வெற்றி பெறவில்லை. தனுஷ் இப்படத்தில் பிச்சைக்காரன் ஆக தன்னை வருத்தி நடித்த போதிலும் தமிழ் ரசிகர்களை ஏன் கவரவில்லை என்று தெரியவில்லை.
தெலுங்கில் நல்ல வசூலை செய்து வரும் இப்ப படத்தை பற்றி சேகர் கமுலா கூறுகையில் வெளிநாடுகளில் கூட குபேரா திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
ஆனால் தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை குபேரா திரைப்படம் பிடித்ததாக தமிழ் ரசிகர்கள் கூறியிருக்கின்றனர்.
ஆனால் வசூல் செய்யவில்லை இந்த திரைப்படத்தில் தனுஷ் பிச்சைக்காரனாக அருமையாக நடித்திருக்கிறார்.
வேறு எந்த நடிகராலும் இந்த கதாபாத்திரத்தில் அவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது. தமிழ் ரசிகர்கள் தனுஷருக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று நினைத்தேன் ஆனால் தமிழில் படம் ப்ளாப்பானதை நினைக்கும் பொழுது வேதனையாக இருக்கிறது என்றார்.


